ஒம்சரவணபவா
குரு பெயர்ச்சி பலன் - 2026 -
2027 - மிதுன ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
புதனின் ராசியான மிதுனத்தில் பிறந்த நீங்கள் பல
கலை வித்தகராக இருந்து பலரை
வழிகாட்டக்கூடிய திறமை கொண்ட நபராக இருப்பீர்கள். இது
நாள் வரை
ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு
பகவான் தற்போது ஏற்படக்கூடிய பெயர்ச்சியின் மூலமாக குரு
பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு 2-ல்
உச்சம் பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு
மறுமலர்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். தாராள தன வரவு
காரணமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறைவது மட்டும் இல்லாமல் கடன்களை குறைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 3-ல் கேது
வரும் 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு ஒரு
சாதகமான அமைப்பு என்பதால் எந்த
காரியத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களது குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம்
உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 2-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க கூடிய குரு
பகவான் தனது
சிறப்பு பார்வையாக 6, 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் குறையக் கூடிய ஒரு
சூழலும் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த
வம்பு வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரக்கூடிய அமைப்பும் உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல
பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உங்களது தேக
ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த
மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த
உடல் ரீதியான பிரச்சினைகள் எல்லாம் கூட தற்போது விலகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனைவி, பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் எல்லாம் வரும் நாட்களில் குறையும். பெரிய மனிதர்களுடைய ஆதரவானது உங்களுக்கு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு எல்லாம் வரும் நாட்களில் ஒரு நல்ல
தீர்வு கிடைக்கும். உங்களின் பேச்சுத்திறமை காரணமாக சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் குரு பகவான் 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்த பிரச்சினையும் சமாளித்து ஏற்ற
மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் மாறி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். உங்கள் பொருட்களுக்கு நல்ல
விலை கிடைத்து லாபகரமான பலன்களை அடைய முடியும். மறைமுக போட்டிகள் விலகி ஏற்ற
மிகுந்த பலன்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் அரசு
வழியில் இருந்து வந்த சட்ட
சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகுவதால் தொழிலை நிம்மதியுடன் செய்ய முடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். தொழில் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்
மூலம் அனுகூலங்களும் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் தற்போது கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாரத்தை பெறுவீர்கள். பிறரால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து அதிகாரிடம் நல்ல
பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சக
ஊழியர் உடைய
ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல
பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை
தேடி கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருவது மட்டுமில்லாமல் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல
சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
சனிபகவான் 10-ல்
சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வளமான பலன்களை அடைய
முடியும். பணி
தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வீடு,
வாகனங்களை பராமரிப்பதற்காக செலவுகள் செய்ய நேரிடும். தற்போது 3, 9-ல் சஞ்சரிக்கக் கூடிய கேது-
ராகு வரும் 5-12-2026 முதல் கேது
பகவான் 2-ம்
வீட்டிலும் ராகு
பகவான் 8-ம்
வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காரணத்தினால் ராகு-
கேது பெயர்ச்சிக்கு பிறகு கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் சிறப்பு. பயணங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து மருத்துவ செலவுகள் குறையும். இவ்வளவு நாட்களாக மனதில் நிலவி கொண்டிருந்த சில
பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
கடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம்
நீட்டுவார்கள். பொன்
பொருள் சேரும். சிலருக்கு வீடு
மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த நீண்ட நாள் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடைய கூடிய காலமிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சூழ்நிலைக்கு தகுந்தவாரு சிறப்பாக செயல்பட்டு உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கை
நழுவிய வாய்ப்புகளும் தேடி வருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி முதலாளி என்ற
பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை
நிலவும். கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலமிது. புதிய நவீன
கருவிகள் வாங்குவதற்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களை நிறுவ கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண்
பழிச்சொற்கள் விலகி எதிர்பாராத பதவி
உயர்வுகள் தேடி
வரும். பெயர், புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளி இடங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்
அரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலமிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற
முடியும். காய்,
கனி, பூ,
போன்றவற்றால் லாபம் கிட்டும். கால்
நடைகளை வாங்க முடியும். நிலங்கள் மீது இருந்த வம்பு வழக்குகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதை
தேர்ந்தெடுப்பது என
முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும் அதன்
மூலம் நற்பலன்களும் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புது
வீடு கட்டி குடிபுக கூடிய வாய்ப்பு உண்டாகும்.
மாணவ மாணவியர்
கல்வியில் இருந்து வந்த மந்த
நிலைகள் விலகி ஞாபக சக்தி அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சு போட்டி ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். நல்ல
நண்பர்களின் நட்பு தேடி வரும். தேவையற்ற பொழுது போக்குகளில் உள்ள
நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் 31-10-2026 முதல் 13-12-2026 வரை
குரு அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரியங்களில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். சனி 10-ல்
சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த
நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வேலைபளு காரணமாக உடல்
அசதி ஏற்படும்.
குரு பகவான் வக்ர கதியில் 13-12-2026 முதல் 13-04-2027 வரை
குரு வக்ர
கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபடுவதில் சற்று மந்த
நிலை ஏற்படும். ராகு 8-ல்,
கேது 2-ல்,
சனி 10-ல்
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண்
விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய
முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன்
பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தூர
பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 10-ல் சனி
சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள்
எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற
வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை
எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
உங்கள் ராசிக்கு வரும் 5-12-2026 முதல் 8-ல் ராகு,
2-ல் கேது
சஞ்சரிப்பதால் ராகு
காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை
வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ
பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண
மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8, நிறம் - பச்சை, வெள்ளை, கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம் திசை - வடக்கு
தெய்வம் – விஷ்ணு
No comments:
Post a Comment