Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மகர ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மகர ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

நவகிரகங்களில் ஆயுள்காரன் என வர்ணிக்கப்படக்கூடிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் கடின உழைப்பிற்கு உதாரணமாக விளங்கக்கூடிய நபராக இயற்கையில் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3, 12-க்கு அதிபதியான குரு இது வரை 6-ல் சஞ்சரித்து வந்தார். தற்போது ஏற்பட இருக்க கூடிய குரு பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) சம சப்தம ஸ்தானமான 7-ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். இந்த தருணத்தில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் வரும் நாட்களில் உண்டாகும். உங்களுடைய கனவுகள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருந்த அனைத்து விதமான பொருளாதார நெருக்கடியும் இருந்த இடம் தெரியாமல் மறையும். நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு அனுகூலமான நிலை உண்டாகும். செலவுகள் குறைவாக இருப்பதால் சேமிப்புகள் அதிகரித்து அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த இடையூறுகள் விலகி சுப காரியங்கள் எளிதில் கைகூடி மன மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்க கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் சோர்வு எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு மற்றவருடைய ஆதரவானது சிறப்பாக இருந்து பல்வேறு முன்னேற்றத்தை அடைவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புத்திரவழியில் மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புதிதாக வீடு கட்டக்கூடிய வாய்ப்பு மற்றும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு.

தொழில் வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுடைய திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களுடைய ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து லாபகரமான பலன்களை அடைய முடியும். தொழில் நிமித்தமாக இருந்து வந்த மறைமுக போட்டிகள் எல்லாம் விலகி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகி தொழிலை நிம்மதியுடன் செய்ய முடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு வேலை பளு சற்று குறையும். தொழில் நிமித்தமாக வெளி நபர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு புதிய கிளைகளை நிறுவக்கூடிய வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து வேலையில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பிறரால் முடிக்க முடியாத ஒரு காரியத்தை கூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அது மட்டும் இல்லாமல் உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய யோகமானது உண்டு. புதிதாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரம் ஆகும். உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வயதில் மூத்தவர்களுடைய ஆதரவானது உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது என வரும் 5-12-2026 முடிய சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதும், அதன் பின் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நீங்கள் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். பல்வேறு வளமான பலன்களை நீங்கள் பெற்றாலும் நெருங்கியவரிடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தோடு இருப்பது, கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. ஒரு சில நேரங்களில் தேவையற்ற வகையில் உணர்ச்சி வசப்பட்டு வீண் பிரச்சினைகளை சிக்கிக் கொள்வீர்கள். அதனால் எந்த ஒரு செயலை செய்கின்ற பொழுதும் சற்று யோசித்து செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வரும் டிசம்பர் வரை 8-ல் கேது இருப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

வரும் நாட்களில் உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு வாரிசு யோகம் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலமுடன் இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆரோக்கிய பாதிப்பு படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. பணவரவுகள தாராளமாக இருந்து கடன்கள் குறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல் 

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்க்கு நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெற முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களால் நல்ல லாபங்களை அடைவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்த கால நெருக்கடிகள் யாவும் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ஊதிய உயர்வுகளால் பொருளாதார நிலையானது உயரும். வேலைபளு குறையும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

அரசியல்

தாங்கள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகள் தடையின்றி கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மறைமுக வருவாய்கள் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் உங்கள் பெயர் புகழை உயர்த்தும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். காய், கனி போன்றவற்றால் சிறப்பான லாபத்தை பெற முடியும். வங்கி கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆடம்பர கார், வீடு, மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவர். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்ட கூடிய அளவிற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராளமான பண நடமாட்டம் இருப்பதால் வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவுகளும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல உயர்வினை அடைய முடியும். சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு அற்புதமாக இருப்பதால் மனநிறைவு உண்டாகும். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். நல்ல நண்பர்களின் நட்புகளால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் சற்று அலைச்சல் ஏற்பட்டாலும் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். ராசியாதிபதி சனி 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எளிதில் முன்னேற முடியும். 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். புதிய ஆடர்கள் கிடைத்து கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு பெரிய நிறுவனத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும் சனி 3-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரத்தை சற்று குறைத்து கொள்வது நல்லது. பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்தது செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல வேலை வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

 

பரிகாரம்

ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8     நிறம் - நீலம், பச்சை                           கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                           தெய்வம் - விநாயகர்

No comments: